சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Madras), செயற்கை நுண்ணறிவு, தரவுப் பகுப்பாய்வு (B.Tech. Artificial Intelligence and Data Analytics) ஆகியவற்றில் (பாடநெறி குறியீடு- 412எல்) பி.டெக். படிப்பைத் தொடங்கியுள்ளது. 2024-25-ம் கல்வியாண்டிலிருந்து இதற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது. ஏஐ என்பது பொறியியல், அறிவியல் மற்றும் மானுடவியல் துறைகளை உள்ளடக்கியதாகும். இத்துறையில் வெற்றிகரமாகத் திகழ பல்துறைத் தொடர்புகளைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம். இதற்காகவே செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுப் பகுப்பாய்வில் பி.டெக் படிப்பு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற படிப்பு உலகிலேயே முதன்முறையாகும். இதனை வழங்குவதன் மூலம் வளர்ந்துவரும் சந்தையில் பெரும் ஏஐ சவால்களை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும், உயர்மட்ட ஏஐ வல்லுநர்கள், தொழில்முனைவோர், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரை உருவாக்கவும் ஐஐடிஎம் விரும்புகிறது. பாடத்திட்டத்தின் சிற்ப்பு சென்னை ஐஐடி வழங்கும் இளங்கலைப் பட்டம், மாணவர்களின் முக்கிய திறன்கள் மற்றும் அறிவாற்றலை மேம்படுத்தும் வகையில் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு, தரவுப் பகுப்பாய்வு ஆகியவற்றின் நிபுணத்துவத்தைப் பல்வேறு அம்சங்களில் வளர்க்கச் செய்து தொழில்துறையில் பரந்த அளவில் பயன்பாடுகளை வழங்குவதே இப்பாடத்திட்டத்தின் நோக்கமாகும். பல்துறை அம்சங்களுடன் கணித அடிப்படைகள், தரவு அறிவியல்/ ஏஐ/எம்எல் அடித்தளங்கள், பயன்பாட்டு மேம்பாடு, பொறுப்பான வடிவமைப்புகளும் இப்பாடத்திட்டத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கும். சென்னை ஐஐடி-யின் முன்னாள் மாணவரும், ஐகேட், மாஸ்டெக் டிஜிட்டல் ஆகியவற்றின் இணை நிறுவனருமான திரு சுனில் வாத்வானியின் ரூ. 110 கோடி நன்கொடையில் நிறுவப்பட்டுள்ள வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளி மூலம் இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள சிறந்த செயற்கை நுண்ணறிவு மையமாகக் கொண்ட பள்ளிகளில் ஒன்றாக விளங்கச் செய்து, தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான கொள்கைகளை அரசுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது இதன் இலக்காகும். பி.டெக்கின் இப்பாடத்திட்டம் பல்வேறு கல்வி நெகிழ்வுத்தன்மையை வழங்கும். மாணவர்கள் தங்கள் கற்றல் பயணத்தை இதே துறையிலும் பிற துறைகளில் இருந்தும் விருப்பத் தேர்வுகள் மூலம் மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இதற்கான பாடத்திட்டத்தை நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உள்ளகப் பயிற்சி, இளங்கலை ஆராய்ச்சி, போன்றவை இருப்பதால் மாணவர்கள் நடைமுறை அனுபவங்களைப் பெறுவதற்கான பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன மாணவர் சேர்க்கை முறை ஜேஇஇ (அட்வான்ஸ்டு) [JEE (Advanced)] தேர்வு மூலம் இப்பாடத்திட்டத்திற்கான மாணவர் சேர்க்கை நடைபெறும். ஜேஇஇ மூலம் இதில் 50 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்