யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்பு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆனணயரகம் (Commissionerate of Indian Medicine and Homoeopathy), அரும்பாக்கம், சென்னை ஒவ்வொரு கல்வியாண்டிற்கான பி.என்.ஒய்.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கான (BNYS Yoga and Naturopathy) சேர்க்கை அறிவிப்பை வெளியிடும். ஒவ்வொரு கல்வியாண்டிலும் அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பி.என்.ஒய்.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்பு (BNYS Yoga and Naturopathy) சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தனித்தனியாக தகுதியுள்ளவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. வழங்கப்படும் படிப்பு பி.என்.ஒய்.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கான (BNYS Yoga and Naturopathy) - 5 1/2 ஆண்டுகள் விண்ணப்பிக்கத் தகுதிகள் கல்வித்தகுதி: +2 விண்ணப்பிக்கும் முறை மேற்கண்ட பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேட்டினை, https://tnayushonline.co.in/ என்ற வலைதளத்தில் காணலாம். இணையவழியில் மட்டுமே (Online Applications) விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். வேறு எந்த வழியிலும் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள். விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள். கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களினை https://tnayushonline.co.in/ என்ற வலைதளத்தில் உள்ள உரிய தகவல் தொகுப்பேட்டில் அறியலாம். விண்ணப்பிக்கும் முன் உரிய தகவல் தொகுப்பேட்டினை முழுமையாகப் படித்து சரியான தகவல்களைப் பதிவேற்ற வேண்டும் மற்றும் தேவையான இடங்களில் அனைத்து அசல் சான்றிதழ்களின் PDF/JPEG வடிவில் பதிவேற்ற வேண்டும். விண்ணப்பக் கட்டணம், இணையவழி கலந்தாய்வுக் கட்டணம், கல்விக் கட்டண முன்பணம் இவை அனைத்தும் இணையவழி மூலமாக மட்டுமே செலுத்தவேண்டும். கல்லூரிகளின் விவரங்கள்: அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள்-02. சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள்-20. அரசு சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் மட்டும், இணையவழியில் விண்ணப்பித்த பிறகு அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, கோரப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களையும் இணைத்து செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குநர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-600 106 என்ற முகவரிக்கு குறிப்பிட்ட தேதிக்குள் சமர்ப்பித்தல் வேண்டும். வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை 9