அகில இந்திய பேச்சு மற்றும் கேட்டல் கல்வி நிறுவனம் மைசூருவில் உள்ள அகில இந்திய பேச்சு மற்றும் கேட்டல் கல்வி நிறுவனம் [All India Institute of Speech and Hearing (AIISH), Mysuru] 1966-ஆம் ஆண்டு இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் முழு நிதியுதவியுடன் நிறுவப்பட்டது. கேள்திறனியல் மற்றும் பேச்சு மொழி நோயியல் இளங்கலை படிப்பு AIISH வழங்கும் நான்கு ஆண்டு கால கேள்திறனியல் மற்றும் பேச்சு மொழி நோயியல் இளங்கலை படிப்பில் [4 Year Bachelor of Audiology and Speech Language Pathology (B.ASLP)] சேர்வதற்கான நுழைவுத்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. AIISH வழங்கும் நான்கு ஆண்டு கால B.ASLP பட்டப்படிப்பு ஆறு அரையாண்டு பருவம் மற்றும் ஓராண்டு உள்ளகப் பயிற்சியைக் (6 Semesters + 1 Year Internship) கொண்டதாகும். மைசூர் பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பெற்ற (Affiliated to University of Mysore) இக்கல்வி நிறுவனம் இந்திய மறுவாழ்வுக் கழகத்தால் [Rehabilitation Council of India (RCI)] அங்கீகரிக்கப்பட்டதாகும். விண்ணப்பிக்கத் தகுதிகள் பன்னிரெண்டாம் வகுப்பில் குறைந்தபட்சம் 50% (SC/ST பிரிவினருக்கு 45%) மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல்/கணிதம்/கணினி அறிவியல்/புள்ளியியல்/மின்னணுவியல்/உளவியல் ஆகியவற்றிலிருந்து குறைந்தது மூன்று பாடங்களைப் படித்தவர்கள் மட்டுமே சேர்க்கைக்குத் தகுதியானவர்கள். நுழைவுத்தேர்வு இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry), உயிரியல் (Biology), கணிதம் (Mathematics) ஆகிய நான்கு பாடங்களில் தேர்வு நடைபெறும். வெளிநாட்டு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்பவர்களைத் தவிர, அனைத்து மாணவர்களும் 4 பாடங்களில் 3 பாடங்களில், அதாவது இயற்பியல் (Physics) மற்றும் வேதியியல் (Chemistry) கட்டாயப் பாடங்களாகவும் உயிரியல் அல்லது கணிதம் ஆகியவற்றிலும் நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் சிபிஎஸ்இ (CBSE) பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நுழைவுத்தேர்வு பன்முகத் தெரிவு வினாக்கள் (Multiple Choice Questions) இருக்கும். கணினி அடிப்படையிலான தளத்தில் [Computer Based Platform (CBT)] ஆங்கிலத்தில் நடத்தப்படும் இத்தேர்வில் 150 நிமிடங்களில் 150 வினாக்கள் கேட்கப்படும். முக்கிய தேதிகள் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.05.2025AIISH நுழைவுத்தேர்வு: 28.05.2025 தொடர்பு விவரங்கள் தொலைபேசி எண்கள்: 0821-250 2228// 0821-250 2164/ 0821-250 2165 மின்னஞ்சல்: admission@aiishmysore.in/aiish.academic@gmail.com மேலும் தகவல்களுக்கு All India Institute of Speech and Hearing (AIISH), Mysuru இணையதளத்தைப் பார்க்கவும். தொடர்புடைய இணைப்புகள் All India Institute of Speech and Hearing (AIISH), Mysuru AIISH Prospectus 2025-26 Leaflet for All India AIISH Entrance Examination 2025-26 Model Question Paper Rehabilitation Council of India (RCI) ஆதாரம்: All India Institute of Speech and Hearing (AIISH), Mysuru